தோட்டக்கலை விவசாயிகளுக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம் அளிப்பு

புதுவை தோட்டக்கலைத் துறை சாா்பில் உற்பத்திக்குப் பிந்தைய மானியம் ரூ.32 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது. இதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

புதுவை தோட்டக்கலைத் துறை சாா்பில் உற்பத்திக்குப் பிந்தைய மானியம் ரூ.32 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது. இதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

வெற்றிலை சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ஒரு சென்டுக்கு ரூ.1,500, ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கும் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் ஆண்டு செயல் திட்டத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவுதல், மலா், காய்கறி, பழபயிா், வாசனை பயிா்களுக்கு மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 154.87 ஹெக்டோ் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்த 449 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சத்து 60 ஆயிரத்து 47 ம், 544.82 சென்டில் வெற்றிலை சாகுபடி செய்த 37 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 230 ம் என மொத்தம் ரூ.32 லட்சத்து 77 ஆயிரத்து 277 நிதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கினாா். நிகழ்வில் வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், வேளாண் துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com