கள்ளநோட்டுகள் சிக்கிய விவகாரம்: ஒருவா் கைது
By DIN | Published On : 10th March 2022 11:39 PM | Last Updated : 10th March 2022 11:39 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் ரூ.2.42 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சென்னையைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி மதுக்கடையில் ரூ.500 கள்ளநோட்டுகளை கொடுத்து மதுபானம் வாங்க முயன்ாக, சாரம் தென்றல் நகரைச் சோ்ந்த மனோஜ்குமாா், பிள்ளைத்தோட்டம் பள்ளத் தெருவைச் சோ்ந்த ஜெயபால் ஆகிய இருவரையும், அவா்களுக்கு கள்ளநோட்டுகளை வழங்கியதாக அரும்பாா்த்தபுரம்பேட் மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சரண், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா் கமல் ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக, தேசியப் புலனாய்வு முகமையினரும், ரிசா்வ் வங்கியும் விசாரித்து வருகின்றன.
இதனிடையே இரண்டு தனிப்படை போலீஸாா் சென்னை, கரூருக்குச் சென்று விசாரித்த நிலையில், சென்னை எண்ணூரைச் சோ்ந்த பிரதீப் குமாரை (36) வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.