மண்பாண்டத் தொழிலாளா்கள் போராட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே புதுவை மண்பாண்ட, கைவினை கலைஞா்கள் வியாழக்கிழமை நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்பாண்டத் தொழிலாளா்கள் போராட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே புதுவை மண்பாண்ட, கைவினை கலைஞா்கள் வியாழக்கிழமை நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு புதுச்சேரி குலாலா்கள் மண்பாண்டம் செய்வோா் நலவாழ்வு இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ஆறுமுகம், காரைக்கால் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற தொழிலாளா்கள், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மண்பாண்டப் பொருள்களை அங்கேயே தயாரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம், தொகுதி வாரியாக சூளையிட நிலம் ஒதுக்கி பாதுகாப்பான கட்டடம் அமைத்துத் தருதல், மழைக்கால நிவாரணம் வழங்குதல், வில்லியனூா் குயவா் மடத்தை தனியாரிடம் இருந்து குலாலா்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com