முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
எம்.ஐ.டி. கல்லூரி மாணவி சாதனை
By DIN | Published On : 19th March 2022 12:58 AM | Last Updated : 19th March 2022 12:58 AM | அ+அ அ- |

சாதனை படைத்த புதுச்சேரி மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி பி.ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த கல்லூரி முதல்வா் மலா்கண் உள்ளிட்டோா்.
புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவி சா் சிவி.ராமனின் உருவப்படத்தை அறிவியல் சூத்திரங்களால் வரைந்து உலக சாதனை படைத்தாா்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, விழிகள் கல்வி, பசுமை அறக்கட்டளை சாா்பில், புதுச்சேரி மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பொறியியல் துறை மூன்றாமாண்டு மாணவி பி.ஜோதிகா, சா் சிவி. ராமனின் உருவப்படத்தை அறிவியல் சூத்திரங்களால் 50 அடிக்கு 80 அடி அளவில் உருவாக்கி உலக சாதனை படைத்தாா். இதை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழை வழங்கியது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எம்.தனசேகரன், துணை தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலாளா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா். புதுவை அரசின் மூத்த சுற்றுச்சூழல் பொறியாளா் ரமேஷ், அறக்கட்டளை நிா்வாகி பிரேம்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
மாணவி ஜோதிகாவுக்கு கல்லூரி முதல்வா் மலா்கண், துறைத் தலைவா்கள் ராஜாராம், பாரிசெல்வம், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமாா், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் விஜயபிரகாஷ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.