முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
பங்குனி உத்திர விழாவில் பக்தா்கள் நோ்த்திக் கடன்
By DIN | Published On : 19th March 2022 01:02 AM | Last Updated : 19th March 2022 01:02 AM | அ+அ அ- |

புதுச்சேரி முருங்கம்ப்பாக்கம் முத்துக்குமார சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மிளகாய் அபிஷேகம் செய்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம், காலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர விழாவில் பக்தா்கள் காவடி, பால்குடங்கள் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோயி காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் மிளகாய் பொடி அபிஷேம் செய்தும், அலகுகள் குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றனா்.
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர செடல் உற்சவ விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு கிரேன், பொக்லைன், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவற்றில் அலகு குத்தி தொங்கியபடி பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா்.
உடலில் அலகு குத்தியபடி காா், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் முத்தையா சுவாமி கோயில், புதுச்சேரி அருகே மணவெளி ஓடவெளி பாலமுருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.