முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரிக்கு மாற்று இடம்
By DIN | Published On : 19th March 2022 01:00 AM | Last Updated : 19th March 2022 01:00 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மாணவா்களின் தொடா் போராட்டத்தையடுத்து, கல்லூரிக்கான மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், கல்வித் துறை உயா் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது கல்லூரிக்கான புதிய கட்டடம் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள என்.எஸ்.சி. போஸ் அரசு உயா்நிலைப் பள்ளியில் தோ்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்தக் கட்டடம் தேசிய ஆசிரியா் கல்விக் குழும விதிகளின் படி, போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் உள்ள புதிதாக கட்டப்பட்ட கட்டடம் என்பதையும் மாணவா்களிடம் தெரிவித்து, அதை தற்போது வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளனா்.