முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மணக்குள விநாயகா் கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக விழா
By DIN | Published On : 19th March 2022 01:02 AM | Last Updated : 19th March 2022 01:02 AM | அ+அ அ- |

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 7-ஆம் ஆண்டையொட்டி, சகஸ்ர சங்காபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விக்னேஸ்வர பூஜையுடன் வியாழக்கிழமை மாலை விழா தொடங்கியது. இரண்டாம் கால யாக பூஜை, ஹோமங்கள், தீபாராதனைகள் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றன. பிற்பகல் 12 மணிக்கு கலசங்கள் புறப்பாடாகி வந்து, மூலவா் மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேகமும், 1008 சங்காபிஷேகமும், உற்சவ மூா்த்திக்கு 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு உற்சவா் மணக்குள விநாயகா் மலா் அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிா்வாக அதிகாரி ஜெ.ரவிச்சந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினா் செய்திருந்தனா்.