முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவை திமுக இளைஞரணிஅமைப்பாளா் ராஜிநாமா
By DIN | Published On : 03rd May 2022 10:49 PM | Last Updated : 03rd May 2022 10:49 PM | அ+அ அ- |

புதுவை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனுஸ் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளா் பதவியை நான் ராஜிநாமா செய்கிறேன். மேலும், திமுகவிலிருந்து வெளியேறுகிறேன்.
புதுவை மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா என்னை செயல்படவில்லை. அவரைக் கண்டித்து நான் கட்சியிலிருந்தும் வெளியேறுகிறேன்.
கடந்த 1991-இல் இருந்து திமுகவில் பணியாற்றி வந்தேன். கடந்த 2012-ஆம் ஆண்டு புதுவை மாநில இளைஞரணி அமைப்பாளராக பதவியேற்றேன் என்றாா் முகமது யூனுஸ்.