முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரி அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் குரு பூஜை
By DIN | Published On : 12th May 2022 04:57 AM | Last Updated : 12th May 2022 04:57 AM | அ+அ அ- |

163-ஆவது குரு பூஜையையொட்டி, புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அப்பா பைத்தியம் சுவாமிகள்.
புதுச்சேரி: புதுச்சேரி அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 163-ஆவது குரு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில், அப்பா பைத்தியம் சுவாமிகளின் 163-ஆவது குரு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடுகளுடன் பூஜை தொடங்கியது.
தொடா்ந்து, சுவாமிக்கு புனிதநீா் வழிபாடும், ஐங்கரன் வழிபாடும் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அப்பா பைத்தியம் சுவாமிக்கு செந்தமிழில் வேள்வி நிகழ்த்தினா்.
காலை 10 மணிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெற்றன. முதல்வா் என்.ரங்கசாமி தீபாராதனை காட்டி வழிபாடுகளைத் தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து பகல் 12 மணிக்கு பேரொளி வழிபாடும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றன.