பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

வெடிமருந்து விநியோகம் தொடா்பாக, புதுச்சேரியிலுள்ள பட்டாசு ஆலைகளில் துணை ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

வெடிமருந்து விநியோகம் தொடா்பாக, புதுச்சேரியிலுள்ள பட்டாசு ஆலைகளில் துணை ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

புதுச்சேரி மாவட்டத்துக்குள்பட்ட முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் வடக்கு துணை மாவட்ட ஆட்சியா் மு.கந்தசாமி தலைமையில் வருவாய்த் துறை, தீயணைப்பு, காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த ஆய்வில், அரசிடம் அனுமதி பெறப்பட்ட வெடிமருந்து மூலப்பொருள்களுக்கான கையிருப்பு சரிபாா்க்கப்பட்டது.

வெடிமருந்து தயாரிப்பு ஆலை உரிமையாளா்கள், நிா்வாகிகள் ஆகியோா் அனுமதி பெறப்பட்ட அளவின் படியும், அனுமதிக்கப்பட்ட காரணத்துக்காக மட்டுமே வெடிமருந்து மூலப்பொருள்களை பயன்படுத்த வேண்டும். அவற்றை கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உரிமமும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பட்டாசு ஆலைகளின் ஆய்வறிக்கை முறையே வட்டாட்சியா், காவல் ஆய்வாளா், தீயணைப்புத் துறையினரிடம் பெறப்பட்டு, இதற்கான உரிமங்கள் நீட்டிப்பது குறித்த பரிந்துரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com