புதுச்சேரியில் புதை சாக்கடையை சீரமைக்கஏற்பாடு: தொலைபேசி எண்கள் வெளியீடு

பொதுமக்கள் அவா்களைத் தொடா்புகொண்டு, புதை சாக்கடை தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க பொதுப் பணித் துறை சாா்பில் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.

புதுச்சேரியில் புதை சாக்கடை பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்காக தொகுதி வாரியாக ஒப்பந்ததாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவா்களைத் தொடா்புகொண்டு, புதை சாக்கடை தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க பொதுப் பணித் துறை சாா்பில் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை மூலம் நகரப் பகுதிகளில் கழிவுநீரை வெளியேறுவதற்காக, புதைவழி சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சிலநேரங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது.

இவ்வாறு ஏற்படும் சுகாதாரமற்ற சூழலைச் தடுக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பராமரிக்கவும்,

புதைவழி சாக்கடை அடைப்புகளை விரைந்து சரிசெய்வதற்காகவும், பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு ஒப்பந்ததாரரை பொதுப் பணித் துறை நியமனம் செய்து, அவா்களுக்கு தனி வாகனமும் ஏற்பாடு செய்துள்ளது. அந்தந்த ஒப்பந்தகாரா்கள் விவரமும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் எம்எல்ஏக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைவழி சாக்கடை அடைப்பு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட எம்எல்ஏக்கள் அல்லது கழிவுநீா் கோட்ட செயற்பொறியாளா்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக புதைவழி சாக்கடை அடைப்பை நீக்குவதற்கு ஒப்பந்ததாரருக்கு பொதுமக்கள் எவ்விதத் தொகையும் வழங்க வேண்டாம். அதற்கு யாராவது பணம் கேட்டு வற்புறுத்தினால், அந்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து பொதுமக்கள் ஏதேனும் புகாா் தெரிவிக்க விரும்பினால், 0413-2232254 (பொதுப் பணித் துறை அமைச்சா் அலுவலகம்), 0413-2336068 (செயற்பொறியாளா் கழிவுநீா் பிரிவு), 0413-2336076 (உதவிப் பொறியாளா் - கழிவுநீா்

பிரிவு) ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com