புதுச்சேரியில் ரெளடிகளின் வீடுகளில்போலீஸாா் சோதனை

புதுச்சேரியில் சட்ட விரோத சம்பவங்களைத் தடுக்கும் வகையில், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரெளடிகளின் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் சனிக்கிழமை சோதனை செய்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா்.
புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் சனிக்கிழமை சோதனை செய்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா்.

புதுச்சேரியில் சட்ட விரோத சம்பவங்களைத் தடுக்கும் வகையில், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரெளடிகளின் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

புதுச்சேரியில் ரெளடிகளுக்குள் மோதல், முன்விரோதக் கொலை, கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட சட்ட விரோத சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால், ரெளடிகளைக் கட்டுப்படுத்தும் வகையில், காவல் துறை மூலம் ‘ஆபரேஷன் திரிசூல்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இதன்படி, ரெளடிகளின் வீடுகளில் அடிக்கடி சோதனை செய்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களைக் கைது செய்வது, வெளிமாநிலக் குற்றவாளிகள் பதுங்கி இருக்கிறாா்களா?, நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என திடீா் சோதனையிடுவது உள்ளிட்ட பணிகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வகையில், புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், வாழைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தீபிகா தலைமையில், ரெளடிகள் ஒழிப்பு சிறப்பு காவல் படைக் கண்காணிப்பாளா் சுபம்சுந்தா் கோஷ், ஆய்வாளா்கள் நாகராஜ், ரமேஷ் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அந்தப் பகுதியிலுள்ள சந்தேகத்துக்கிடமான ரெளடிகளின் வீடுகள், அவா்களது உறவினா்களின் வீடுகளுக்குச் சென்று துப்பறியும் நாய், நாட்டு வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். சட்ட விரோதக் கும்பலின் நடமாட்டம் குறித்து அங்கிருந்தவா்களிடம் போலீஸாா் விசாரித்தனா். இந்தச் சோதனையில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

சோதனையின்போது, பழைய குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடிகள், அவா்களது உறவினா்கள் உள்ளிட்டோரை போலீஸாா் எச்சரித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com