புதுவை மின்துறை தனியார்மய நடவடிக்கை: மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு மீண்டும் ஆர்ப்பாட்டம்

புதுவை அரசின் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து, கடந்த பிப்ரவரி மாதம் 1, 2 ஆம் தேதிகளில் மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை மின்துறை தனியார்மய நடவடிக்கை: மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு மீண்டும் ஆர்ப்பாட்டம்

புதுவை: புதுவை அரசின் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து, கடந்த பிப்ரவரி மாதம் 1, 2 ஆம் தேதிகளில் மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், புதுவை மின்துறை தனியார்மயம் குறித்து, அனைத்து மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்டறிந்து சாதக, பாதங்களை அறிந்த பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று, அப்போது மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில், புதுவை மின்துறை தனியார்மயத்திற்கான நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புதுவை மின்துறை ஊழியர் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள்- ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்புப் போராட்டக்குழு சார்பில் புதுவை அரசின் மின்துறை தனியார்மய நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் அருள்மொழி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வேல்முருகன், சிறப்பு ஆலோசகர்கள் ராமசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். அனைத்து மின் துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டு, புதுவை மின்துறை தனியார்மய நடவடிக்கையை கண்டித்தும், அதை கைவிடக் கோரியும் முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com