புதுச்சேரி: காவல் நிலையம் அருகே ரெளடி வெட்டிக்கொலை
By DIN | Published On : 26th May 2022 09:37 AM | Last Updated : 26th May 2022 09:37 AM | அ+அ அ- |

ரெளடி சரத் (எ) பொடிமாஸ்
புதுச்சேரியில் காவல் நிலையம் அருகே ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த பிரபல ரெளடி சரத் (எ) பொடிமாஸ்(23). இவர் இன்று அதிகாலை 4 மணியளவில் அரியாங்குப்பம் காவல் நிலையம் பின்புறம் உள்ள அவரது மாமன் வீட்டில் இருந்த போது ஒரு கும்பல் வீடு புகுந்து சரமாரியாக கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு கொலை கும்பலை தேடி வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட சரத் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் காவல் நிலையம் பின்புறம் வீடு புகுந்து ரெளடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.