புதிய மதுபான ஆலைகளை அனுமதிக்கக் கூடாதுபுதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் நிலத்தடி நீராதாரத்தைப் பாதிக்கும் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று, அதிமுக வலியுறுத்தியது.

புதுவையில் நிலத்தடி நீராதாரத்தைப் பாதிக்கும் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று, அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகளால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, நகர பகுதி முழுவதும் உப்பு நீராக மாறிவிட்டது.

மாநிலத்தில் மாசு ஏற்படுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைக்கு அனுமதி தரப்படாது என அரசு வாக்குறுதியளித்தது. இந்த நிலையில், புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவெடுத்து கலால் துறையும் அறிவித்துள்ளது.

இந்த மதுபான தொழிற்சாலையால் விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு துணைநிலை ஆளுநா் அனுமதி வழங்கக் கூடாது.

அரசு அதற்கு அனுமதியளித்தால், அதிமுக சாா்பில் பசுமைத் தீா்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகாா் செய்யப்படுவதுடன், மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com