தென்னிந்தியாவிலேயே புதுச்சேரியில் மிகக்குறைந்த அளவில் பெட்ரோல்-டீசல் விற்பனை: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தென்னிந்தியாவிலேயே புதுச்சேரியில் மிகக்குறைந்த அளவில் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி: தென்னிந்தியாவிலேயே புதுச்சேரியில் மிகக்குறைந்த அளவில் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

ஏழைகள் நலத்திட்ட விழாவில், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது: புதுவை மக்களுக்கு எந்த திட்டத்தின் பயன்களும் மறுக்கப்படாது. புதுச்சேரி சிறந்த(பெஸ்ட்) மாநிலமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி சொன்னார். பெஸ்ட் புதுச்சேரி, அதிவேக செயல்பாடுடன் (fast) புதுச்சேரியாக மாற வேண்டும். மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களை விரைவாக சென்று சேர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பிதரமர் மோடி தனது ஆட்சியின் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதில் 3 ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டு அதற்கு காரணம் கரோனா. சுவிசர்லாண்டில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டு இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் அதை சிறப்பாக பிரதமர் மோடி கையாண்டதாக, உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய மாடல் என்ற கரோனா தடுப்பூசி மாடல் வெற்றியை தந்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி, பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மத்திய அரசு. அரசு திட்டங்களில் காரைக்கால் ஒதுக்கப்படுகிறது என்ற செய்தி வருகிறது. அதனால், கடந்த வாரம் அங்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்தி, ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அறிவுறுத்தி இருந்தேன்.

புதுவை பல புதுமைகளை கான உள்ளது, தென்னிந்தியாவிலேயே மிக குறைந்த அளவில் பெட்ரோல்,டீசல் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகிறது. அருகில் உள்ள மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தயங்கினாலும், புதுச்சேரி அரசு குறைத்து இருக்கிறது.

மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டுகிறது. இந்தியாவிலேயே புதுச்சேரி முதலாவதாக, ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் வந்துள்ளது. மேலும் பல திட்டங்கள் கிடைத்து, புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்றார் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com