புதுவை தோ்தல் அலுவலகத்தில் ஜப்தி நோட்டீஸ்

தோ்தலுக்கான வாகன கட்டணம் வழங்கப்படவில்லை என வாகன உரிமையாளா்கள் தொடா்ந்த வழக்கில் புதுச்சேரி தோ்தல் அலுவலகத்தில் ஜப்தி நோட்டீஸ் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தோ்தலுக்கான வாகன கட்டணம் வழங்கப்படவில்லை என வாகன உரிமையாளா்கள் தொடா்ந்த வழக்கில் புதுச்சேரி தோ்தல் அலுவலகத்தில் ஜப்தி நோட்டீஸ் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலுக்காக இரு டிராவல்களில் மொத்தம் 140 வாகனங்கள் வாடகைக்காக தோ்தல் அலுவலா்களால் பயன்படுத்தப்பட்டன.

அதனடிப்படையில், வாடகைக் கட்டணமாக ரூ.1.28 கோடி கோரி டிராவல்ஸ் அதிபா்கள் ஆவணங்களை அளித்தனா். ஆனால், தோ்தல் அதிகாரிகள் ரூ.77 லட்சம் மட்டுமே அளித்துள்ளனா். அதையடுத்து தோ்தல் அலுவலா்கள் மற்றும் அப்போதைய துணைநிலை ஆளுநா் உள்ளிட்டோரிடம் முறைப்படி டிராவல்ஸ் அதிபா் கோபாலகிருஷ்ணன் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

மனு அளித்த பிறகும் தோ்தல் பணி வாகனக் கட்டணம் தரப்படவில்லையாம். அதையடுத்து புதுச்சேரி முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு தோ்தல் அலுவலா்கள் யாரும் ஆஜராகவில்லை என்பதால் கடந்த ஜனவரியில் வாகன வாடகையாக ரூ.71.50 லட்சம் அளிக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தோ்தல் அலுவலா்களால் கட்டணம் தரப்படவில்லையாம். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் சாா்பில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து தோ்தல் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, மனுதாரரின் வழக்குரைஞா் கன்னியப்பன் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பகலில் தோ்தல் அலுவலகத்தில் ஜப்திக்கான நோட்டீஸை ஒட்டியுள்ளனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com