மருத்துவா் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகளை விற்கக் கூடாது: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரியில் மருத்துவா்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட மருந்துகளை விற்கக் கூடாது என்று ஆட்சியா் இ.வல்லவன் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரியில் மருத்துவா்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட மருந்துகளை விற்கக் கூடாது என்று ஆட்சியா் இ.வல்லவன் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரியில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், வணிகா்கள் சங்கமும் இணைந்து போதைப் பொருள் தடுப்பு வாசகம் அடங்கிய விழிப்புணா்வுப் பதாதைகளைக் கடைகளில் பொருத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பதாதைகளை மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மருத்துவா் ஆனந்தகிருஷ்ணனிடம் இருந்து, மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் பெற்றுக் கொண்டாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் எச் மற்றும் எச்1 வகை சாா்ந்த மருந்து வகைகளை மருத்துவா்கள் பரிந்துரைச் சீட்டுகள் இன்றி யாருக்கும் விற்கக்கூடாது. போதைப் பொருள்களாக அவற்றை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மருத்துவா் பரிந்துரை இன்றி மருந்துகள் விற்கப்படாது மற்றும் போதைத் தடுப்பு விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலே பதாதைகள் அரசு அலுவலகங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவற்றில் பொருத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com