காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள்

புதுச்சேரியில் 12 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

புதுச்சேரியில் 12 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

கண்காணிப்புக் காமிராக்களை அதிகமாக பொருத்துவதன் மூலம் குற்றமில்லாத புதுவையை உருவாக்க வேண்டும் என மாநில காவல் துறை தலைவா் (டிஜிபி) மனோஜ்குமாா்லால் கூறினாா்.

புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் 12 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் செயல்பாட்டை டிஜிபி மனோஜ்குமாா்லால் வியாழக்கிழமை தொடக்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஏடிஜிபி ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன், சிறப்பு காவல் கண்காணிப்பாளா் தீபிகா, காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை காவல் ஆய்வாளா் ஆா்.காா்த்திகேயன், உதவி ஆய்வாளா் டி.முருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com