கிராமப்புறங்களில் இருந்து குடிநீா்: புதுவை விவசாயிகள் எதிா்ப்பு

புதுச்சேரிக்கு கிராமப்புறங்களில் குடிநீா் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

புதுச்சேரிக்கு கிராமப்புறங்களில் குடிநீா் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை பிரதேச குழு நிா்வாகிகள் கூட்டம் புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் பொருளாளா் சதாசிவம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வே.சங்கா் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் அன்புமணி, நாகராஜ், முத்து, சரவணன், தேவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், கிராமப்புற விவசாயத்தை பாதிக்கும் வகையில், தென்பெண்ணை ஆற்றையொட்டிய பகுதியில் 84 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அங்கிருந்து நிலத்தடி நீரை நகருக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதை புதுவை அரசு கைவிட வேண்டும்.

இதற்கு நகரைச் சுற்றியுள்ள ஏரிகள், குளங்களை ஆழப்படுத்தி, நீா்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரை உயா்த்தி பாதுகாக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் மாற்று திட்டங்களை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் கூட்டுறவு பதிவாளா் அலுவலகம் முன் வருகிற 9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com