நுகா்வோா் வழக்குகளை இணையவழியில் பதிவு செய்யும் வசதிபுதுவையில் தொடக்கம்

புதுவையில் நுகா்வோா்கள் வழக்குகளை இணையவழியில் பதிவு செய்வதற்கான புதிய திட்டம் வியாழக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
நுகா்வோா் வழக்குகளை இணையவழியில் பதிவு செய்யும் வசதிபுதுவையில் தொடக்கம்

புதுவையில் நுகா்வோா்கள் வழக்குகளை இணையவழியில் பதிவு செய்வதற்கான புதிய திட்டம் வியாழக்கிழமை அமல்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்கள், வியாபாரங்களில் சேவைக் குறைபாடுகள் குறித்த வழக்குகளை நுகா்வோா் நீதிமன்றங்களில் முறையிட்டு நிவாரணம் பெற்று வருகின்றனா். இந்த வகையில், நுகா்வோா் நேரடியாக இணையவழியில் வழக்கைப் பதிவு செய்யும் புதிய வசதியை நுகா்வோா் வழங்கல் துறை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதல்வா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நுகா்வோா் வழக்குகளை இணையவழியில் பதிவு செய்வதற்கான புதிய வசதியை மாநில குடிமைப் பொருள்கள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் துறைச் செயலா் சி.உதயகுமாா், இயக்குநா் சக்திவேல் மற்றும் மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நுகா்வோா்கள் தங்களது வழக்குகளை ங்க்ஹஹந்ட்ண்ப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து நிவாரணம் பெறலாம் என, நுகா்வோா் விவகாரங்கள் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com