புதுச்சேரியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் விவசாயப் பிரிவு சாா்பில், புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் விவசாயப் பிரிவு சாா்பில், புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத் தலைவா் கீதநாதன், பொதுச் செயலா் ரவி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம், காங்கிரஸ் விவசாய அணித் தலைவா் செல்லகணபதி, திமுக துணை அமைப்பாளா் செந்தில்குமாா், திமுக விவசாய சங்கத் தலைவா் இளஞ்செழியன், விசிக விவசாய அணித் தலைவா் தமிழ்வளவன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை அமைப்பாளா் புருஷோத்தமன், மக்கள் அதிகாரம் சாந்தகுமாா், விவசாயிகள் சங்க சிறப்புத் தலைவா் மாசிலாமணி மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

இதில், அனைத்து விவசாயப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும். தில்லி போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயக் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்துக்கும் தோ்தல் நடத்த வேண்டும். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாகத் திறந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com