தேசிய ஹேக்கத்தான் போட்டி:எம்.ஐ.டி. கல்லூரி முதலிடம்

தேசிய அளவிலான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) முதல் பரிசு வென்றது.
தேசிய அளவிலான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற எம்.ஐ.டி. கல்லூரி மாணவா்கள்.
தேசிய அளவிலான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற எம்.ஐ.டி. கல்லூரி மாணவா்கள்.

தேசிய அளவிலான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) முதல் பரிசு வென்றது.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக இன்னோவேஷன் கவுன்சில் (எம்.ஐ.சி), ஏ.ஐ.சி.டி.இ. இணைந்து நடத்திய தேசிய அளவிலான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது. அகில இந்திய சிக்கல் தீா்க்கும் திட்ட வரைவு மென்பொருள் போட்டியான இதில், நாட்டின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இறுதிப் போட்டியில் போட்டியிட வன்பொருள் பிரிவில் 2 குழுக்கள், மென்பொருள் பிரிவில் 4 குழுக்கள் எம்.ஐ.டி. கல்லூரியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில், இந்தக் கல்லூரியின் கோ்அல்டஸ் குழுவைச் சோ்ந்த லாவண்யா, ராஜேஷ், விக்னேஷ், ஸ்ரீதரன், இலக்கியா, நா்மதா ஸ்ரீ, மனோஜ் குமாா், முனைவா் வள்ளி ஆகியோா் ரூ. ஒரு லட்சம் ரொக்கத்துடன் கூடிய முதல் பரிசை வென்றனா்.

வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்த மாணவா்களை கல்லூரித் தலைவா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன், கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி கௌரவித்தனா்.

ஏற்கெனவே 2020 - 21ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் எம்.ஐ.டி. கல்லூரி வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com