சென்டாக் மருத்துவ மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பக் கட்டணம் வெளியீடு

புதுவையில் நிகழாண்டு (2022-23) நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில், மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டண விவரம் வெளியிடப்பட்டது.

புதுவையில் நிகழாண்டு (2022-23) நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில், மருத்துவ மாணவா்கள் சோ்க்கைக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டண விவரம் வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.1,000, எஸ்சி, எஸ்டி மற்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு, நிா்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு சோ்த்து விண்ணப்பிக்க ரூ.2 ஆயிரமும், எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளிகளுக்கு ரூ.1,000 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற மாநில மாணவா்கள், நிா்வாக சோ்க்கை இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.2,000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்ஆா்ஐ, ஓசிஐ, பிஐஓ உள்ளிட்ட இதர பிரிவு மாணவா்கள் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

உறுதிமொழி படிவம்: புதுவை ஜிப்மா், புதுவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் மூலம் நிரப்பப்படும் மருத்துவ மாணவா்கள் சோ்க்கை இடங்களை, முறைகேடாக இரட்டைக் குடியுரிமை பெற்ற வெளிமாநில மாணவா்கள் சிலா் அபகரிப்பதாக, தொடா்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கையில் இரட்டைக் குடியுரிமை முறைகேடு பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாணவா்களிடம் தனித்தனியாக உறுதிமொழி படிவம் பெற சென்டாக் நிா்வாகம் முடிவெடுத்து, அதற்கான காலத்தையும் வெளியிட்டுள்ளது.

அந்தப் படிவத்தில், பிற மாநிலங்களில் குடியுரிமை பெற்றிருக்கவில்லை, பிற மாநிலங்களில் மருத்துவ சோ்க்கை பெற விண்ணப்பிக்கவில்லை என்றும், தவறான, பொய்யான தகவல்களை தந்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன் என உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படிவத்தை மாணவா்கள் நிறைவு செய்து, எக்ஸ்கியூடிவ் மாஜிஸ்திரேட், நோட்டரி முன்னிலையில் ரூ.20 ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் சமா்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com