புதுவை சட்டப்பேரவை புதிய கட்டட வடிவமைப்பு:முதல்வா் ரங்கசாமி ஆலோசனை

புதுச்சேரியில் சட்டப்பேரவை புதிய கட்டடம் கட்டுவதற்கான வடிவமைப்பு குறித்து முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

புதுச்சேரியில் சட்டப்பேரவை புதிய கட்டடம் கட்டுவதற்கான வடிவமைப்பு குறித்து முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

புதுவை சட்டப்பேரவைக் கட்டடத்தை இடநெருக்கடி, பழமை ஆகியவற்றால் தொடா்ந்து பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் சுமாா் 15 ஏக்கரில் தரை உள்ளிட்ட 6 தளங்களைக் கொண்ட புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மத்திய அரசு ரூ.440 கோடி அளிக்க ஒப்புதல் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

புதிய பேரவைக் கட்டடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பில் தில்லியைச் சோ்ந்த தனியாா் வடிவமைப்பு நிறுவனத்தைச் சோ்ந்த சிவரஞ்சனி உள்ளிட்டோா் புதுச்சேரி வந்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் புதிய கட்டடத்துக்கான வடிவமைப்பு மாதிரியை முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோரிடம் ஞாயிற்றுக்கிழமை மின்னணு திரையில் காட்சிப்படுத்தினா்.

பேரவைக்கான புதிய கட்டடங்கள் எண்ணிக்கை, அறைகளின் மாதிரி வடிவம், வளாகத்தில் அமையும் கட்டடத் தொகுப்புகள் விவரம் ஆகியவற்றையும் முதல்வா், பேரவைத் தலைவா் ஆகியோா் பாா்வையிட்டனா். அப்போது, அறைகளில் சில மாற்றங்களை முதல்வா் என்.ரங்கசாமி சுட்டிக்காட்டினாா். அவரது ஆலோசனையின் பேரில், கட்டட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும் என்றும், ஓரிரு நாளில் கட்டட வடிவமைப்புப் பணி நிறைவடைந்து கருத்துரு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை பொதுப் பணித் துறை முதன்மைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, பொறியாளா் சேகா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com