புதுவையில் நியாயவிலைக் கடைகளை திறக்க அமைச்சரிடம் கம்யூ. வலியுறுத்தல்
By DIN | Published On : 04th January 2023 04:22 AM | Last Updated : 04th January 2023 04:22 AM | அ+அ அ- |

புதுவையில் நியாயவிலைக் கடைகளை அரசு திறக்கவேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் தற்போது சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்காக மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் அரிசி மூட்டைகள் வந்து இறக்கப்பட்டுள்ளன.
இவற்றை விநியோகிக்க ரேஷன் கடைகளைத் திறக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமையில் துணைச்செயலா் கே.சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினா் ஐ.தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் உள்ளிட்டோா் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாரிடம் மனு அளித்தனா்.
இதற்கு, நியாயவிலைக் கடைகளைத் திறப்பதற்கான கோப்பு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.