புதுச்சேரியில் ஜூலை 2 வரை விமான சேவைகள் ரத்து!
By DIN | Published On : 20th June 2023 12:09 PM | Last Updated : 20th June 2023 12:09 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 2 வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் ஹதராபாத் மற்றும் பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் நேற்று பெய்த கனமழைக்கு 7 பேர் பலி, 70 பேர் காயம்!
விமான சேவைகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவு செய்த விமான பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...