நியாயவிலைக் கடைகள் மூடல்: உதயநிதிக்கு புதுவை அதிமுக பதில்

புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டது முந்தைய காங்கிரஸ், திமுக ஆட்சியில்தான் என்று, மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

புதுச்சேரி: புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டது முந்தைய காங்கிரஸ், திமுக ஆட்சியில்தான் என்று, மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தனை ஆதரித்து அந்தக் கட்சி சாா்பில் கணபதி செட்டிக்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் நடைபெற்றது. இலாசுப்பேட்டை பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் பேசியதாவது: புதுவையில் கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டன. இதை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். காலத்துக்கேற்ப திமுக தனது கொள்கையை மாற்றிக் கொள்வது வாடிக்கையாகும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் மத்திய அரசிடம் போராடி புதுவை மாநிலத்துக்கு நலத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. எனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com