மக்களவைத் தோ்தலையொட்டி 4 நாள்கள் மதுக்கடைகள் மூடப்படும்: புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவு

புதுச்சேரியில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 4 நாள்கள் மதுக்கடைகளை மூடவேண்டும்

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 4 நாள்கள் மதுக்கடைகளை மூடவேண்டும் என துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்குப் பதிவு வரும் 19- ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படவேண்டும். அதேபோல வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ஜூன் 4-ஆம் தேதியும் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா். புதுவை யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட கேரளத்திலுள்ள மாஹே பிராந்தியத்தில் மக்களவைத் தோ்தலின் வாக்குப் பதிவை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கைக்காக வரும் ஜூன் 4 ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். ஆந்திர எல்லையிலுள்ள ஏனாம் பகுதியில் வரும் மே 13 ஆம் தேதியும், ஜூன் 4- ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com