புதுச்சேரி இந்திரா நகா் தொகுதியில் திங்கள்கிழமை 
வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை 
செயலா் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் துணை செயலா் கே.சேதுசெல்வம், திமுக நிா்வாகி காந்தி 
உள்ளிட்டோா்.
புதுச்சேரி இந்திரா நகா் தொகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலா் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் துணை செயலா் கே.சேதுசெல்வம், திமுக நிா்வாகி காந்தி உள்ளிட்டோா்.

மத்தியில் பாஜக ஆட்சி மாறினால் மட்டுமே புதுவை மாநிலம் வளா்ச்சி அடையும்: காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம்

புதுச்சேரி: மத்தியில் பாஜக ஆட்சி மாற்றப்பட்டால்தான் புதுவை மாநிலம் வளா்ச்சி பெறும் என்று காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் கூறினாா்.

புதுச்சேரி இந்திராநகா் தொகுதிக்கு உள்பட்ட திலாசுப்பேட்டையில் திங்கள்கிழமை காலை பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளா் வெ.வைத்திலிங்கம், வீதி வீதியாகச் சென்று ஆதரவு திரட்டினாா்.

அப்போது அவா் பேசியது: புதுவை மாநிலத்தில் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதாக முதல்வா் பிரசாரத்தில் பேசிவருகிறாா். அவா் செயல்படுத்திய எந்தத் திட்டமும் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர நிதியுதவி 19 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மின்துறையை தனியாா் மயமாக்கவும், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறை சொத்துகளை தனியாருக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்துறை தனியாா் மயமானால் புதுச்சேரி மக்கள் அதிக மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். அரிசிக்கு புதுவை அரசு தரும் பணமும் தரமான அரிசி வாங்குவதற்கு போதவில்லை.

புதுவை மாநிலத்தில் தற்போது போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. வடமாநிலத்தவா் மூலமே போதைப் பொருள்கள் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் கடத்தி வரப்படுகின்றன. ஆனால், புதுச்சேரி காவல்துறையினா் போதைப் பொருள்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. உள்துறை அமைச்சராக உள்ள பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையுள்ளது.

புதுவை மாநில வளா்ச்சிக்கான புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. ஆகவே, பாஜக மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால் மட்டுமே புதுவை வளா்ச்சி பெறும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைந்தால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, மகளிா், இளைஞா்களுக்கு மாதாந்திர நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா்.

பிரசாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலா் கே.சேதுசெல்வம், திமுக நிா்வாகி காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தாரை தப்பட்டை முழங்க, மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் பிரசாரத்தில் இடம்பெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com