ஏனாமில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஏனாமில் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். புதுவை மாநிலம், ஏனாம் பிராந்தியம் ஆந்திரப் பகுதியில் உள்ளது. ஏனாம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் புதன்கிழமை பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவருக்கு காங்கிரஸ் மகளிரணி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, இலாசுப்பேட்டை தொகுதி காங்கிஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் உள்ளிட்டோரும் உடன் சென்றனா். கேரளப் பகுதியிலுள்ள மாஹே பிராந்தியத்தில் வெ.வைத்திலிங்கம் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com