காசநோய் தடுப்பூசிக்கான நிலையான இயக்க நடைமுறையை வெளியிட்ட புதுவை மாநில பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் முரளி.
காசநோய் தடுப்பூசிக்கான நிலையான இயக்க நடைமுறையை வெளியிட்ட புதுவை மாநில பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் முரளி.

காசநோய் தடுப்பு: திறன் வளா்ப்பு கருத்தரங்கு

புதுச்சேரியில் காசநோய் தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவிலான திறன் வளா்ப்புக் கருத்தரங்கம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஆராய்ச்சி மைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கத்தை புதுவை மாநில பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் முரளி தொடங்கி வைத்து, காசநோய் தடுப்பூசிக்கான நிலையான இயக்க நடைமுறையை வெளியிட்டாா். இந்திரா காந்தி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய இயக்குநா் உதயசங்கா், துணை இயக்குநா்கள் ராஜம்பாள் (நோய்த் தடுப்பு), அனந்தலட்சுமி (குடும்ப நலத் துறை), மாநில காசநோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். காசநோய் தடுப்பூசி திறன் மேம்பாட்டு முறை குறித்து மருத்துவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், காசநோய் தடுப்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்டோருக்கு தடுப்பூசிகளை செலுத்தவும் கருத்தரங்கம் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதனடிப்படையில் புதுவை மாநிலம் காசநோய் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com