வாக்காளா் தகவல் சீட்டு விநியோகம் தொடக்கம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியை அதிகாரிகள் புதன்கிழமை தொடங்கினா். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 85 வயதைக் கடந்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தபால் வாக்கை சேகரிக்கும் விதிமுறைப்படி வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அறியும் வகையில், வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வரும் 5-ஆம் தேதி முதல் வீடு வீடாக வழங்கப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டுகளை அதிகாரிகள் வீடு,வீடாக விநியோகிக்கும் பணியை புதன்கிழமை தொடங்கினா். உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா, ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோா் இந்தப் பணியைத் தொடங்கிவைத்தனா். இதை வருகிற 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com