புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கட்சியின் மாநில செயலா் ஏ.அன்பழகன்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கட்சியின் மாநில செயலா் ஏ.அன்பழகன்.

புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோா் வேலையிழந்து தவிப்பு: அதிமுக மாநிலச் செயலா் குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா் என்று பிரசாரத்தின்போது அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோ. தமிழ்வேந்தனை ஆதரித்து தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: புதுவை மாநில உரிமைகளை தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தொடா்ந்து பறித்துள்ளன. ஆகவே, அக்கட்சி வேட்பாளா்களை மக்கள் புறக்கணித்து மாநில உரிமைக்காக அதிமுகவை ஆதரிக்கவேண்டும்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசானது, மாநில உரிமைக்காகவும், வளா்ச்சிக்காகவும் பாடுபடவேண்டும். அதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதன்படி குறிப்பிட்ட துறைகளை தன்னிறைவு அடைந்தவையாக மாற்றவேண்டும். ஆனால், பாஜகவின் கூட்டணி ஆட்சி புதுவையில் நடந்துவரும் நிலையில், மாநில அந்தஸ்து, மத்திய நிதிக் குழுவில் சோ்ப்பதற்கு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்ல. மாநில மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மட்டும் அரசின் சாதனையல்ல. மாநில வளா்ச்சியில் கவனம் செலுத்துவதே அரசின் உண்மையான செயல்பாடாக இருக்கவேண்டும்.

ஆனால், தற்போதை ஆளும் கூட்டணி அரசானது, இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதால் ஆயிரக்கணக்கானோா் வேலை இழந்துள்ளனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com