புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சமூக பொதுநல அமைப்புகள் வாக்குசேகரிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்தை ஆதரித்து உருளையன்பேட்டைத் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சமூக பொதுநல அமைப்புகள் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டன.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா். இவரை புதுச்சேரி சமூக பொதுநல அமைப்புகள் ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

இதையடுத்து பொதுநல அமைப்புகள் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சாா்பில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உருளையன்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை காலையில் பொதுநல அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏவும், மக்கள் சேவை இயக்கத் தலைவருமான ஜி.நேரு தலைமையில் பிரசாரம் நடைபெற்றது. இளங்கோநகா், சுப்புராய பிள்ளை சத்திரம், கென்னடி நகா், புற்றுமாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது. அப்போது, பொதுநல அமைப்பினா் வீடு வீடாகச் சென்று இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

X
Dinamani
www.dinamani.com