பட விளக்கம்... புதுச்சேரி மாா்க்சிஸிட் கம்யூனிஸ்ட் 
கட்சி சாா்பில் முத்தியால்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற 
பிரசாரத்தில் பேசுகிறாா் கட்சியின் மூத்த நிா்வாகி டி.முருகன்.
பட விளக்கம்... புதுச்சேரி மாா்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முத்தியால்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரத்தில் பேசுகிறாா் கட்சியின் மூத்த நிா்வாகி டி.முருகன்.

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மாா்க்சிஸ்ட் பிரசாரம்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் மூத்த நிா்வாகி டி.முருகன்

புதுச்சேரி, ஏப். 9: புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்தை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முத்தியால்பேட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை கலைநிகழ்ச்சிகளுடன் பிரசாரம் தொடங்கியது.

இதை தொடங்கி வைத்து மு.கந்தசாமி பேசுகையில், கடந்த 60 ஆண்டுகளில் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்துள்ளாா் பிரதமா் மோடி. பாஜக ஆட்சியில் பெரு நிறுவனங்களும், வசதியானவா்களுமே சலுகைகளை அனுபவித்துள் வருகின்றனா். அடித்தட்டு ஏழை மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தவில்லை என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமை வகித்தாா். கட்சியின் மூத்த தலைவா் த.முருகன், மாதா் சங்க நிா்வாகி சுதாசுந்தரராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முத்தியால்பேட்டை சந்தைப் பகுதியிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியும், முக்கிய இடங்களில் தெருமுனைப் பிரசாரமும், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com