புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் பெத்துசெட்டிபேட்டை அரசு பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் அடிபடை வசதிகள் தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் பெத்துசெட்டிபேட்டை அரசு பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் அடிபடை வசதிகள் தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.

லாஸ்பேட்டை வாக்குச்சாவடியில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். புதுச்சேரி பிராந்தியத்தில் 739 வாக்குச்சாவடிகளும், காரைக்காலில் 164 வாக்குச்சாவடிகளும், மாஹேவில் 31 மற்றும் ஏனாமில் 33 வாக்குச்சாவடிகளுமாக மொத்தம் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் வரம்பிற்குள்பட்ட காமராஜா் நகா், லாஸ்பேட்டை மற்றும் காலாப்பட்டு ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு புதுச்சேரி தோ்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், நிழல்பந்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்று வாக்களிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம் ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி அ. சுரேஷ்ராஜ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com