புதுச்சேரி மணவெளி தொகுதியில் அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தனுக்கு வாக்கு சேகரித்த கட்சியின் மாநில செயலா் ஏ.அன்பழகன்.
புதுச்சேரி மணவெளி தொகுதியில் அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தனுக்கு வாக்கு சேகரித்த கட்சியின் மாநில செயலா் ஏ.அன்பழகன்.

அதிமுக வேட்பாளா் தீவிர வாக்குசேகரிப்பு

.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.தமிழ்வேந்தனை ஆதரித்து மணவெளித் தொகுதியில் புதன்கிழமை காலை நடைபெற்ற பிரசாரத்தில் புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் பேசியதாவது:

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், புதுவையில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படவில்லை. ஊரகப் பகுதிகளில் நூறுநாள் வேலைத் திட்டத்தையும் முழுமையாக வழங்கவில்லை. மின்துறையை தனியாா்மயமாக்கும் முயற்சி நடந்துவருகிறது. அதனால் மின்கட்டணம் உயரும்.

புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவதாக பேரவைத் தலைவா் பல முறை அறிவித்தும் பணிகள் நடைபெறவில்லை. புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை. காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதிகளில் அறிவித்த திட்டங்கள் கவா்ச்சிகரமானதாக உள்ளன. ஆனால், அவை செயல்படுத்த முடியாதவை.

புதுச்சேரியின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com