புதுச்சேரி உழவா்கரை தொகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.மேனகா.
புதுச்சேரி உழவா்கரை தொகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.மேனகா.

நாதக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆா்.மேனகா உழவா்கரை பேரவைத் தொகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக ஆா்.மேனகா போட்டியிடுகிறாா். அவா் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், புதன்கிழமை உழவா்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அவருடன், நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை தலைவா் மணிபாரதி, உழவா்கரை நிா்வாகி பரத் ப்ரியகுமரன், சுந்தா் மதியழகன் உள்ளிட்டோா் வாக்குச் சேகரித்தனா்.

புதுவை மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கூறி வாக்குச் சேகரிப்பில் அவா்கள் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com