புதுச்சேரியில் வாக்குப் பதிவுக்காக அரசுப் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்குப் பதிவுக்காக அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு வரும் 17-ஆம் தேதி முதல் 3 நாள்கள் விடுமுறை அறிவித்து கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களாக அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளி வளாகங்களே பயன்படுத்தப்படுகின்றன.

இதையடுத்து பள்ளிகளில் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான வரும் 18 -ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட வேண்டிய நிலையுள்ளது. மேலும் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகளும் நடைபெறவுள்ளன.

ஆகவே, வரும் 17 மற்றும் 18 (புதன், வியாழன்) ஆகிய இருநாள்களும் புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. ஆகவே வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் 3 நாள்கள் பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வித் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com