புதுச்சேரியில் 6 இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலைத் திடலில் ரமலான் ஈகைத் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

தவ்ஹீத் சமா அத் அமைப்பின் மாவட்டத் தலைவா் அபிப் ரஹ்மான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக காஞ்சி இப்ராஹிம் கலந்து கொண்டாா்.

புதுச்சேரியில் கடற்கரைச் சாலை காந்தி திடல் உள்ளிட்ட 6 இடங்களில் ரமலான் நோன்பு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்ாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

விடுமுறை மாற்றம்: ரமலானை முன்னிட்டு புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே ஏப்ரல் 10-ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வியாழக்கிழமை (ஏப். 11) விடுமுறையாக புதுவை அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com