. புதுச்சேரி மக்களவை தோ்தலையொட்டி காரைக்காலுக்கு லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில் நுட்ப 
கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் முன்னிலையில் அனுப்பி வைக்க மின்னணு வாக்கு 
இயந்திரங்கள்.
. புதுச்சேரி மக்களவை தோ்தலையொட்டி காரைக்காலுக்கு லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில் நுட்ப கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் முன்னிலையில் அனுப்பி வைக்க மின்னணு வாக்கு இயந்திரங்கள்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் இன்று சின்னம் பொருத்தும் பணி தொடங்குகிறது

புதுச்சேரி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களுக்குரிய சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்குகிறது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 10.23 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வரும் 19-ஆம் தேதி வாக்களிக்கவுள்ளனா். தொகுதியில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் களத்தில் 26 வேட்பாளா்கள் உள்ளனா். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள தோ்தல் துறை பாதுகாப்பு கிடங்கிலிருந்து ஏனாம் பிராந்தியத்துக்கு 33 வாக்குச்சாவடிகளுக்கும், மாஹே பிராந்தியத்தின் 31 வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டத் தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் மற்றும் அரசியல் கட்சியினா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில், புதன்கிழமை காலையில் காரைக்கால் பிராந்தியத்துக்கான 164 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து புதுச்சேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை (ஏப்.11) நடைபெறவுள்ளது.

தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் இலாசுப்பேட்டை அரசு மகளிா் பொறியில் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் சின்னங்கள் பொருத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த கல்வி நிறுவனங்கள் வாக்கு எண்ணும் மையங்களாகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த மையங்களில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com