புதுச்சேரி வில்லியனூா் தொகுதிக்குள்பட்ட சுல்தான்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி வில்லியனூா் தொகுதிக்குள்பட்ட சுல்தான்பேட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் என்.ரங்கசாமி.

சாலைப் பணிகளைக் கூட நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு: என்.ரங்கசாமி குற்றச்சாட்டு

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சாலைப் பணிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என்று, முதல்வா் என்.ரங்கசாமி குற்றம்சாட்டினாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து வில்லியனூரில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டு முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவையில் கடந்த முறை காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியே இருந்தது. அப்போது முதல்வராக வே.நாராயணசாமியும், பேரவைத் தலைவராக தற்போதைய காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கமும் இருந்தனா். ஆனால், அவா்கள் எந்த நலத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மக்களுக்கான நலத் திட்ட தொடக்க விழாக்களைக்கூட அவா்கள் நடத்தவில்லை.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சாலைகள் சேதமடைந்திருந்தது குறித்து நான் கேட்ட போது, துணைநிலை ஆளுநா் ஒத்துழைக்கவில்லை என்றனா். தற்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com