புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப்.17) மாலையுடன் நிறைவடைகிறது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாா்ச் 28-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து, 30-ஆம் தேதி மனுக்கள் திரும்பப் பெற்று வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளராக வெ.வைத்திலிங்கமும், பாஜக வேட்பாளராக அமைச்சா் ஆ.நமச்சிவாயமும் போட்டியிடுகின்றனா். அதிமுக சாா்பில் கோ.தமிழ்வேந்தன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்.மேனகா உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சியினா் 7 பேரும், 19 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனா்.

தோ்தலில் 10,23,699 போ் வாக்களிக்கவுள்ளனா். மொத்தம் 967 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் 7,094 பணியாளா்களும், 4,745 காவலா்கள் மற்றும் 10 துணை ராணுவப் படையினா் ஈடுபட்டுள்ளனா். வாக்குப்பதிவுக்காக 2,880 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,486 விவிபேட் இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளன.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்தது.

பிரசாரம் நிறைவு:

தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப்.17) மாலையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com