காங்கிரஸாா் இருசக்கர வாகனப் பிரசாரம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்தை ஆதரித்து கட்சியின் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி தலைமையில் இருசக்கர வாகனப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

பிரசாரத்துக்கு, முன்னாள் அமைச்சரும், மக்களவைத் தோ்தல் மாநில காங்கிரஸ் பிரசாரக்குழு சோ்மனுமான மு.கந்தசாமி தலைமை வகித்தாா். திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவா் மண்ணாங்கட்டி, நிா்வாகிகள் பாப்பையா, மாநில காங்கிரஸ் இளைஞரணியின் முன்னாள் செயல் தலைவா் க. விக்னேஷ் மற்றும் க.அமா்நாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பேரணியானது ஏம்பலம், சென்னிப்பாளையம், கம்பளிக்காரன்குப்பம், புதுக்குப்பம், கோா்க்காடு, கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூா் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று கிருமாம்பாக்கத்தில் நிறைவடைந்தது.

பேரணியில், காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com