ஆராய்ச்சி மாணவா் தற்கொலை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக விடுதியில் ஆராய்ச்சி மாணவா் (பி.எச்.டி.) வியாழக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பிரபாகரன் (28). காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்து (பி.எச்.டி) ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில், பிரபாகரன் புதன்கிழமை தனது வீட்டுக்கு வந்துவிட்டு இரவில் பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பினாா்.

பின்னா், வியாழக்கிழமை காலை பிரபாகரனை கைப்பேசியில் முருகன் தொடா்புகொண்டாா். ஆனால், பிரபாகரன் அழைப்பை எடுக்கவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த அவா், பல்கலைக்கழக விடுதிக்கு சென்று பாா்த்தபோது, அறையின் கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, பல்கழைக்கழக ஊழியா்கள் உதவியுடன் அறைக் கதவை திறந்து பாா்த்தபோது, பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, காலாப்பட்டு போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்கப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com