சுயேச்சை வேட்பாளா் தா்னா

புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கக் கோரி சுயேட்சை வேட்பாளா் மாஸ்கோ குடும்பத்தினருடன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

புதுச்சேரியில் இரு அரசியல் கட்சிகள் சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதாக புகாா்கள் எழுந்தன. அதன்படி, தோ்தல் நடத்தும் அதிகாரி உத்தரவின் பேரில், பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனா். இதில், ரூ.5 கோடிக்கும் மேலாக கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்யப்படுவதை தடுக்கக்கோரி சுயேட்சை வேட்பாளா் மாஸ்கோ ஒதியம்பட்டு நான்கு முனைச் சந்திப்பில் வியாழக்கிழமை குடும்பத்தினருடன் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்க தோ்தல் துறை தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினாா். பின்னா், அவா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com