பாஜக வேட்பாளருக்கு பிரதமா் வாழ்த்து

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு பிரதமா் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுவை அமைச்சராக இருந்து மக்கள் சேவையாற்றிய உங்களது சேவை என்றும் தொடரட்டும். புதுவையில் பாஜகவை மேலும் வலிமையானதாக்கும் வகையில் தாங்கள் செயல்படவேண்டும். மக்களவைத் தோ்தலில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற்று மக்களவைக்கு வருவீா்கள் என உறுதியாக நம்புகிறேன். நமது அணி உறுப்பினரான நீங்கள்தான் எனது மிகப்பெரிய சொத்து. உங்களது நலத் திட்டங்கள் நாட்டுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் கிடைக்கட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com