இன்று மகாவீரா் ஜெயந்தி: புதுவை முதல்வா் வாழ்த்து

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு,புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு,புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: அனைத்து உயிரினங்களும், அன்போடும், மரியாதையோடும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதை போதித்த, பகவான் மகாவீரா் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும், குறிப்பாக ஜைன சமயக் கொள்கைகளைப் பின்பற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் பகவான் மகாவீரரின் அருளாசி அனைவரது வாழ்க்கையையும் உண்மை, அகிம்சை மற்றும் இரக்க குணத்தால் நிரப்பட்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com