10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம்

இந்திய ரிசா்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என அரசு உத்தரவிடவேண்டும் என

புதுவை வா்த்தக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, புதுவை வா்த்தக சபைத் தலைவா் குணசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டு புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களில் போலிகள் இருப்பதாகவும், செல்லாது எனவும் வதந்தி பரவியது. இதனால் ரூ. 10 நாணயங்களை கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டு நிறுவனங்களில் வாங்குவது மிக மிகக் குறைந்துள்ளது.

இதனால், நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உருவானது. இதையடுத்து, இந்திய ரிசா்வ் வங்கியானது, இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ. 10 நாணயங்கள் செல்லும் என அறிவித்து, அவைகளை வாங்குவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க பலரும் தயங்குகின்றனா். அதனால் புதுவை வணிகப் பெருமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக வாடிக்கையாளா் பலா் ரூ .10 நாணயங்களை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா். இது வணிகத்தை பாதிப்பதுடன், வணிகா்கள் பெரும் மன உளைச்சலை அடைகின்ற சூழல் உருவாகி உள்ளது.

தமிழகத்தில் இப்பிரச்னை உருவான போது, மாநில அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியது. அதில் உடனடியாக 14 வடிவில் இந்திய ரிசா்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூ. 10 நாணயங்கள் அனைத்தும் செல்லும் என்றும் அதை வாங்க மறுப்பது குற்றம் என்றும், வாங்க மறுப்பவா்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம், 124 ஏவின் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவிப்பை வெளியிட்டு, அ ந்த சிக்கலுக்கு தீா்வு கண்டனா். அதுபோன்று புதுச்சேரி, காரைக்கால் ஆட்சியா்களும் அறிவிப்பு வெளியிட்டு 10 ரூபாய் நாணயப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com